விருதுநகரில் பயங்கரம் - ஆம்னி பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி; 19 பேர் படுகாயம்.!
two peoples died and 19 peoples injured amni bus accident in viruthunagar
தென்காசியில் இருந்து கோவை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்தப் பேருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்து போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
two peoples died and 19 peoples injured amni bus accident in viruthunagar