காதலை முறித்துக் கொண்ட இளம்பெண் - ஆத்திரத்தில் காதலன் செய்த விபரீத செயல்.!
two peoples sucide in kerala for love failure
காதலை முறித்துக் கொண்ட இளம்பெண் - ஆத்திரத்தில் காதலன் செய்த விபரீத செயல்.!
கேரள மாநிலத்தில் உள்ள கடுத்துருத்தி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருண் வித்யாதர் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று நெருக்கமாகவும் இருந்து வந்துள்ளனர். அதனை புகைப்படமாகவும் எடுத்துள்ளனர்.
அதன் பின்னர், அந்த இளம்பெண் அருண் வித்யாதரின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடனான காதலை முறித்து கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த அருண் வித்யாதர் காதலியை பழிவாங்க திட்டமிட்டு, காதலித்த போது அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.
இதைப்பார்த்த அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த 2-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த பெண்ணின் பெற்றோர் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் வித்யாதரைத் தேடிவந்தனர். இதை அறிந்த அருண் வித்யாதர் போலீஸாருக்குப் பயந்து தலைமறைவானார். இந்நிலையில் அருண் வித்யாதர் நேற்று போலீசாருக்கு பயந்து காசர்கோடு காஞ்சங்காட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருண் வித்யாதர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples sucide in kerala for love failure