தமிழக மீன்வள கல்லூரியில் லஞ்சம் வாங்கிய இருவர் பணியிடைநீக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக மீன்வள கல்லூரியில் லஞ்சம் வாங்கிய இருவர் பணியிடைநீக்கம்.!!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, முறைகேடாக சேர்ந்த 38 மாணவர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ், தலைஞாயிறு, பொன்னேரி, சென்னை, தூத்துக்குடி உட்பட ஆறு இடங்களில் உறுப்புக் கல்லூரிகள் உள்ளன.

இதில், தலைஞாயிறில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் கடந்த கல்வியாண்டு மற்றும் நடப்பு ஆண்டுகளில், குறைவான கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலரிடம் லஞ்சமாக பல லட்சக்கணக்கான ரூபாய் பெற்றுக்கொண்டு மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

இந்த புகார் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கல்லூரியில் 190-க்கு 127 மதிப்பெண்களுக்கும் குறைவான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்த 38 மாணவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த முறைகேட்டில் தொடர்புடைய மீன்வள பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஜவகர், தட்டச்சர் இம்மானுவேல் உள்ளிட்டோரை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழகம் நேற்று உத்தரவிட்டது. மேலும், முறைகேடாக கல்லூரியில் சேர்ந்த 38 மாணவர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples suspend for bribe college addministration in nagapatinam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->