காணிக்கை எண்ணும் போது கைவரிசையைக் காட்டிய பெண் ஊழியர்கள் - சிசிடிவியில் சிக்கிய அவலம்.!
two woman employees arrest in thiruthani temple for steal
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்தி கடனாக பக்தர்கள் மலைக்கோவிலில் உள்ள உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி விட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை கோவில் இணை ஆணையர் அருணாச்சலம், அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகனன் உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று எண்ணப்பட்டது. அப்போது, உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கோவில் பெண் ஊழியர்கள் 2 பேர் பணத்தை திருடுவது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட 2 பெண் ஊழியர்களை தனி அறையில் வைத்து சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 790-ஐ பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆர்.கே.பேட்டை தாலுகா வீரமங்கலம் பகுதியை சேர்ந்த தேன்மொழி, நாகபூண்டி கிராமத்தை சேர்ந்த வைஜெயந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோவில் இணை ஆணையர் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
two woman employees arrest in thiruthani temple for steal