வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊழியருக்கு 2 ஆண்டு சிறை.! - Seithipunal
Seithipunal


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊழியருக்கு 2 ஆண்டு சிறை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ராஜகுமார் என்பவர் மருந்தாளுனராக பணி புரிந்து வருகிறார். 

இவர் கடந்த 1994-ம் ஆண்டு, மே மாதம் 14-ம் தேதி முதல் 1998-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி வரை வருமானத்திற்கு அதிகமாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 631 ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கிற்கு நீதிபதி ஆர்.கோகுலகிருஷ்ணன் நேற்று மாலை தீர்ப்பு வழங்கினார்.

அந்தத் தீர்ப்பில், “இ.எஸ்.ஐ மருந்தாளுனர் ராஜகுமாருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜகுமார் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை பொது ஏலம் மூலம் அரசுடமையாக்கவும் உத்தரவிட பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two years jail penalty to ESI hospital employee in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->