இரண்டு வயது குழந்தைக்கு எமனாக வந்த ஆல் அவுட் - மணலி அருகே சோகம்.! - Seithipunal
Seithipunal


இரண்டு வயது குழந்தைக்கு எமனாக வந்த ஆல் அவுட் - மணலி அருகே சோகம்.!

சென்னையில் உள்ள மணலி அருகே மாத்தூரில் வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் ஆல் அவுட் திரவத்தை எடுத்து குடித்து லட்சுமி என்ற இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஸ்விட்ச் போர்டில் இருந்த கொசு விரட்டியை எடுத்து உறிஞ்சியுள்ளது. இதனை அந்தக் குழந்தையின் தாய் நந்தினி பார்த்துள்ளார்.

உடனே அவர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும், குழந்தை லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. வீட்டில் இருந்த கொசு விரட்டியைக் குடித்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two years old girl died in chennai mathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->