தேனியில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள்! முக்கிய புள்ளிகள் திருவனந்தபுரத்தில் கைது! - Seithipunal
Seithipunal


தேனியில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருளை புழக்கத்தில் விட்ட இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி சாலையில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அப்போது கேரளா பதிவெண் கொண்ட ஒரு காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். காரில் இரண்டு கிலோ கஞ்சா மற்றும் மெத்தப்பட்டமைன் போதை பொருள் 30 பாக்கெட்டுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் கோவை, ஈரோடு, கம்பம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து லேப்டாப், செல்போன்,கார் மற்றும் போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இதற்கு மூளையாக செயல்பட்ட கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பது தனிபடை போலீசார் நடத்திய  விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து முக்கிய தடயங்களை கண்டுபிடித்த போலீசார் திருவனந்தபுரத்தில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

போலீசார் நடத்திய தீவிர தேர்தல் வேட்டையில் மோகன் நோர்பட் மற்றும் ஆதர்ஸ் ஆகிய இரண்டு முக்கிய குற்றவாளிகளை போலீசார் திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two youths arrested for circulating methamphetamine in Theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->