ரவுடியின் தலையை துண்டித்த வாலிபர்கள் - அதிரடி காட்டிய போலீசார்.!
two youths arrested for kill rowdy in kanchipuram
ரவுடியின் தலையை துண்டித்த வாலிபர்கள் - அதிரடி காட்டிய போலீசார்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், உதவி காவல் ஆய்வாளர் காத்தமுத்து, போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் துரைராஜ் மற்றும் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, வெள்ளை நிற ஹோண்டா கார் ஒன்று வந்தது. இந்த காரை தடுத்து நிறுத்திய போலீசார் காரில் இருந்த 2 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், அவர்கள் இருவரும் குமரன் மற்றும் விக்னேஷ் என்பதும், இருவரும்க் காஞ்சிபுரம் ரவுடியான அஜித் என்பவரின் தலையை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கார் மற்றும் காரில் இருந்த கத்தி, ஹெல்மெட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் படி விரைந்து வந்த காஞ்சிபுரம் போலீசாரிடம் பிடிபட்ட இருவரையும் விக்கிரவாண்டி போலீஸார் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
two youths arrested for kill rowdy in kanchipuram