துணை முதலமைச்சர் பதவி வதந்தியே...  முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாக, கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

கடந்த 2019 மக்களவை பொது தேர்தல் முதல் தொடந்து அனைத்து தேர்தல்களிலும் திமுக அமோக வெற்றியை பெற்று வருகிறது. இந்த தேர்தல் வெற்றிகளுக்கு உதயநிதி முக்கிய பங்காற்றியதாக திமுக தலைவர்கள் மேடைகளில் முழக்கமிட்டு வருகின்றனர். 

மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கு முன்பே துணை முதலமைச்சராக தான் பொறுப்பேற்பார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் விளையாட்டுத்துறை அமைச்சர் மட்டுமே பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட சில அமைச்சர்கள் நேரடியாகவே தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். 

மேலும், முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் அமெரிக்கா பயணம் செல்வதற்கு முன்பாகவே தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், துணை முதலமைச்சர் பதவி தொடர்பான அனைத்து செய்திகளும் வதந்தி தான், எனக்கு துணை முதல் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக பத்திரிகைகளில் வரும் செய்திகள், கிசுகிசு அனைத்துமே வதந்திதான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஊடக வதந்திகளை நம்பி, சிலர் இப்போதே துண்டு போட்டு வைக்கின்றனர் என்றும் அமைச்சர் உதயநிதி, திமுக இளைஞர் அணி 45 ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் பேசியுள்ளார்.

முன்னதாக இந்த இளைஞர் அணி தொடக்க விழா கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக பதிவி ஏற்க வலியுறுத்தி தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi stalin DMK youth wing speech Deputy CM Post


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->