எப்பவுமே வேண்டாம் என்று கூறவில்லை.. இப்போதைக்கு வேண்டாம்.. உதயநிதி பேட்டி.!!
Udhayanidhi Stalin latest press meet
சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக பொதுத்தேர்வு நடத்துவதாக அறிவிப்பு வெளியானது. ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதில் அனைவரும் தேர்வை ஒத்திவைக்க கூறினார்.
மேலும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்ற காரணத்தால் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், அரசு மறுநாளே தேர்வை ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், மீண்டும் ஜூன் 15 ஆம் தேதி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இலட்சக்கணக்கில் உள்ள நிலையில், அனைவருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேர்வுகள் என்பது மிகவும் சிரமமாக இருக்கும். இதனால் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுகளை ஒத்திவைத்து அறிவிக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் அவசியம் என்றாலும், இந்த சூழ்நிலையில் சிறிது காலம் தாழ்த்தி தேர்வு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Udhayanidhi Stalin latest press meet