உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் யாரும் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக, உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். இவர்கள் யாரும் தற்போது இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் பயில முடியாது என்ற ஒரு அதிர்ச்சி தகவலை மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

உக்ரைன்-ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். 


உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கும் மாநில அரசின் முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லையா? என்றும், இதற்கு மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து வருகிறதா? என்றும் பாராளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளதாவது, "உக்ரைனிலிருந்து வந்த மருத்துவ மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை.

உக்ரைன் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து வந்த மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது."என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ukraine war issue july


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->