நடு ரோட்டில் துடிதுடிக்க வெட்டி சாய்க்கப்பட்ட நபர்.. சென்னை அருகே பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


மணலி பகுதிக்கு அருகில் மூல சத்திரத்தை சேர்ந்த 56 வயது அசோகன் என்பவர் திருவொற்றியூர் தபால் நிலைய அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல நேற்று முன் தினம் வேலையை முடித்துவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

மணலி எம்எப்எல் சந்திப்பு அருகில் அவர் சென்றபோது அவரை காரில் பின் தொடர்ந்த சில மர்ம நபர்கள் பைக்கை நிறுத்தி அவரை அறிவாளால் வெட்டிவிட்டு மறுபடியும் காரில் ஏறி அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் அசோகனுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அப்போது வலி தாங்காமல் அசோகன் கத்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அசோகனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மிகவும் ஆபத்தான கட்டத்தில் அசோகன் அங்கே சிகிச்சை பெற்று வருகின்றார். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து எதற்காக அசோகன் வெட்டப்பட்டார் முன் விரோதம் ஏதாவது இருக்கிறதா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unknown person attack post master in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->