தமிழகமே ரெடியா! விரைவில் வருகிறது "ஊரக உள்ளாட்சித் தேர்தல்"!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கான ஊராக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஆனால் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. அதன்படி காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கள்ளக்குறிச்சி வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 4ம் தேதி நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஓரிரு மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. 

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 வரை ஆயுட்காலம் உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலோடு சேர்ந்து மொத்தமாக அனைத்து மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவு வெளியான கையோடு அடுத்ததாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் அதற்கு அடுத்து சட்டமன்ற பொது தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Urban Local Election is coming very soon in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->