பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் வி.சாந்தா பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


டாக்டர் வி.சாந்தா :

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும், முன்னாள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா 1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.

இவர் தனது குருவாக டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை போற்றுகிறார். 12 படுக்கைகளுடன் மட்டுமே இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார்.

இவர் புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மக்சேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், நாயுடம்மா நினைவு விருது, ஒளவையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 

உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். நோயாளிகளுக்கு உதவுவதுடன் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக செயலாற்றி வந்தார்.

நோயாளிகளின் நம்பிக்கை நாயகி என்று போற்றப்பட்ட டாக்டர் வி.சாந்தா 2021ஆம் ஆண்டு ஜனவரி 09ஆம் தேதி மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

v shanta birthday 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->