நூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்..சுயேட்ச்சை  MLA நேரு கோரிக்கை! - Seithipunal
Seithipunal


நூலகங்களில் காலியாக உள்ள 83 பதவிகளையும் நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுயேட்ச்சை  MLA நேரு கோரிக்கைவிடுத்துள்ளார். 

புதுச்சேரி 16-வது சட்டப்பேரவையின் 6-வது  கூட்டத்தொடரில். இன்று..G.நேரு(எ)குப்புசாமி  MLA அவர்கள் பூஜ்ஜியம் நேரத்தில் பேசியது.புதுச்சேரி மாநிலம் முழுவதும் இயங்கி வந்த நூலகம் Library Library கட்டிடங்களை பயன்பாட்டுக்கு இல்லாத நிலை உருவாகி உள்ளது.

இதனால் படித்து கொண்டிருக்கும் மாணவர்கள், குறிப்பாக முக்கிய படிப்புகளான மருத்துவத்தேர்வு, Neet தேர்வு, ஆராய்ச்சி சம்பந்தமான படிப்புகள், பொறியியல் படிப்புகள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளுக்கான போட்டி தேர்வகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு வேலைக்காக தயாராகும் இளைஞர்கள் இதனால் பாதிப்படைகிறார்கள்.
அதேநேரத்தில் இல்லதரசிகளும், குடும்ப தலைவர்களும் தங்களது 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளை நூலகங்களுக்கு அழைத்து சென்று படிப்பு சம்பந்தமான குறிப்புகளை படிக்க வைத்து அதிக மார்க் எடுத்து தேர்ச்சி பெற செய்து பயன் அடைவார்கள்.

அதேபோல அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நூலகம் வந்து செய்திதாள்களை படித்து அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தது.

இது சம்பந்தமாக Library & Information Assistant பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த 2015ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறையின் வாயிலாக அறிவிப்பு வெளியானது.

10 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை இப்பதவிகள் நிரப்பப்படவில்லை. தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 83-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நூலகங்களில் நூலகர்கள் இல்லாததால் போட்டித் தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும். தினசரி நூலகங்களை பயன்படுத்துபவர்களுக்கும், பொது மக்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது.

கடந்த 2022-23, 2023-24 மற்றும் 2024-25ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாண்புமிக கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் நூலகங்களில் காலியாக உள்ள 83 பதவிகளையும் நிரப்புவதற்கு நிதித் துறையின் ஒப்புதல் கிடைத்துவிட்டால், அப்பதவிகள் விரைவில் நிரப்பப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இதுவரை இப்பதவிகள் நிரப்பப்படவில்லை.

ஆகையால் இத்துறையில் காலியாக உள்ள Library & Information Assistant பதவிகளை உடனே நிரப்பி பொதுமக்கள் பயனடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என நேரு(எ)குப்புசாமி  MLA அவர்கள் பூஜ்ஜியம் நேரத்தில் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vacant posts in libraries should be filled immediately Independent MLA Nehru demands


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->