முதலமைச்சரின் உழைப்பு உடலாற்றலை மீறியது - கவிஞர் வைரமுத்து ட்வீட்.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சரின் உழைப்பு உடலாற்றலை மீறியது - கவிஞர் வைரமுத்து ட்வீட்.!

தமிழத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது. ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

இதனை கொண்டாடும் விதமாக நேற்று 2 ஆண்டுகள் சாதனை கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், "ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி" என்ற சாதனை மலரையும் வெளியிட்டார்.

இந்த நிலையில் திமுக அரசின் இரண்டாண்டு நிறைவுக்கு அனைவரும் தங்களது பாராட்டுகளையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக அரசுக்கு கவிஞர் வைரமுத்துவும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- 

’’ஈராண்டு ஆட்சியைச் செம்மனத்தோடு சிந்தித்தால் நன்மை மிகுதி இன்மை குறைவு என்பது புலப்படும்; முதலமைச்சரின் உழைப்பு உடலாற்றலை மீறியது; வெள்ளம் போல் பள்ளம் நோக்கியே பாய்கிறது; 

அருகிக் கிடக்கும் நிதியங்களும் இறுகிக் கிடக்கும் இதயங்களும் சிறிது மேம்பட்டால் சிகரம் தொடலாம்; தொடுவீர்! ’’ என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vairamuththu tweet for dmk government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->