தமிழர்களை வான்பார்க்கச் செய்த பேனா.. கலைஞரின் நினைவு சின்னத்திற்கு வைரமுத்து வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. கட்சியின் தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உயிரிழந்தார். அவரின் நினைவாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழக அரசு, நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னமும் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்பட பல்வேறு துறைகளில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.

இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தமிழக அரசு பொதுமக்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. அதன் பின்னர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியது.

இந்த நிலையில், மத்திய அரசு பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கலைஞரின் பேனா நினைவு தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கவிஞரும், பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து கலைஞரின் பேனா நினைவு சின்னத்திற்கு வரவேற்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "தமிழர்களை
வான்பார்க்கச் செய்த பேனா, கடலையே மை செய்யும் தீராத பேனா, கடற்கரை மணலினும் பெருஞ்சொற்கள் எழுதிய பேனா, ஒன்றிய அமைச்சகத்தின்
ஒப்புதல் பெற்ற பேனா, முதல்வரின்
திறமைக்கும் பொறுமைக்கும்
சாட்சி சொல்லும் பேனா, கலைஞர் பேனா காற்றிலும் எழுதுக" என் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vairamuthu tweet about kalaignar Karunanidhi statue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->