இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது - கவிஞர் வைரமுத்து ட்வீட்.!! - Seithipunal
Seithipunal


இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது - கவிஞர் வைரமுத்து ட்வீட்.!!

நேற்று ஒடிசா மாநிலத்தில் அடுத்தடுத்து மூன்று ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சுமார் 233க்கு மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த உடனே மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை ட்விட்டர் மூலமாகத் தெரிவித்துள்ளார். அதில், ‘’இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது. 

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல். மீட்புப் பணியாளர்க்குத் தலைதாழ்ந்த வணக்கம். இருந்த இடத்தில் எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன். கண்ணீர் கன்னம் தாண்டுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vairamuthu tweet for odisa train accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->