வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை இல்லை.!
Vandaloor zoological park tomorrow open
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளது.
இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது.
இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ. 90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ. 50 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
வண்டலூர் பூங்காவுக்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு பூங்கா செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.
English Summary
Vandaloor zoological park tomorrow open