நாளை முதல் வண்டலூர் பூங்கா மூடல்.! பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.!
Vandalur Zoo closes from tomorrow
சென்னை வண்டலூர் பூங்காவில் ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் மூடப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.
இந்த நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை (ஜனவரி 17) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு எப்போது பூங்கா திறக்கப்படும் என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது
English Summary
Vandalur Zoo closes from tomorrow