காவி நிறத்திற்கு மாறிய வந்தே பாரத் ரயில்.!! காரணம் இதுதான்.!!
Vande Bharat train changed to saffron colour
இந்தியாவில் இயக்கப்படும் அதிவேக ரயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் ரயில் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே தொழிற்சாலையில் ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வரை வந்தே பாரத் ரயில்கள் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுவரை 25 வந்தே பாரத் ரயில்கள் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இயக்கப்பட்டு உள்ளது. இனி இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் காவி மற்றும் வெள்ளை நிறத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்ஜினின் முன் பக்கம் வெள்ளை மற்றும் காவி நிறத்திலும் பெட்டிகளின் நிறம் கருப்பு மற்றும் காவி நிறத்திலும் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இனி உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து ரயில்களும் இந்த நிறத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிற மாற்றம் செய்யப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில்களை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட உள்ளார். ரயில் அதிகம் அழுக்கு ஆவதை தவிர்ப்பதற்காக நிறமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Vande Bharat train changed to saffron colour