தென்மாவட்டங்களுக்கு குட் நியூஸ்! நெல்லைக்கு செப்.24ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில்! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 24ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும் என ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரயில் சேவை தொடங்க விழாவுக்கான முன்னேற்பாடுகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா பணிகள் குறித்து தென்னக கோட்டை ரயில்வே மேலாளர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வரும் செப்டம்பர் 24ஆம் தேதி நெல்லை ரயில் நிலையத்திலிருந்து காலை 11 மணிக்கு வந்தே பாரத் தரையில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்னக கோட்டை ரயில்வே மேலாளர் "வரும் செப்டம்பர் 24ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி மங்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிறகு 11 மணி அளவில் நாட்டின் 9 வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க உள்ளார். அந்த 9 ரயில்களில் திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலும் ஒன்று. 

காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் அழைப்பது குறித்தான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். 

இந்த நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்து ரயில்வே அமைச்சகம் தரப்பில் இருந்து அறிவிக்கப்படும். தற்போது நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளவதற்காக வந்துள்ளோம். இதன் அறிக்கை ரயில்வே அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vande bharat train inaugurate nellai to chennai Sep24


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->