மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - செல்வபெருந்தகை அழைப்பு.!! - Seithipunal
Seithipunal


பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதனால், மோடிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளதாவது:- "பிரதமர் மோடி தலைமையில் அமைந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளாக இந்துத்துவாத கொள்கையை பரப்புகிற நோக்கத்தில், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 

ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்துமே தென் மாநிலங்களில் அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் நலன்களுக்கு விரோதமாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டுகால தமிழக விரோத போக்கை கண்டிக்கிற வகையில், தமிழகம் வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக வருகிற 6-ந்தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். 

சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், எனது தலைமையில் காலை 9.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congrass leader selva perunthagai protest in ramanathapuram against pm modi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->