ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறிப்பு – தருமபுரி காவல் ஆய்வாளர் கைது!
Dharmapuri police inspector arrested
கும்பகோணம் அருகே ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே குலசேகரநல்லூரில், கொள்ளிடம் பாலம் விரிவாக்கத்திற்காக அரசு நிலங்களை கையகப்படுத்தியது. இதன் கீழ், ஆடிட்டர் வி.ரவிச்சந்திரனின் (வயது 68) 80 சென்ட் நிலமும் அரசுடமையாக மாறியது.
குறித்த நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் வெட்டி வேறொரு இடத்துக்கு மாற்றினார். இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினர் மரங்களை பறிமுதல் செய்தனர்.
இதே தகவலை அறிந்த தருமபுரி மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஏ.நெப்போலியன் (வயது 45), "நீ விசாரணையில் இருந்து தப்பிக்க ரூ.1 கோடி கொடு" என்று மிரட்டினார்.
ரவிச்சந்திரனிடம் ஒரு கோடி ரூபாய் பெற்றதோடு, தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதற்காக, ரவிச்சந்திரன் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, நெப்போலியனை கைது செய்தனர்.
English Summary
Dharmapuri police inspector arrested