சில அரசியல் கட்சிகள் குழப்பம் உருவாக்குகின்றன - அண்ணாமலை பேட்டி!
BJP Annamalai say about Political party
மக்களவையில் நேற்று அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "நாடாளுமன்றத்தில் ஒரு முக்கியமான சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதில் ஒரு கோடிக்கும் அதிகமானோரின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக பாஜக இதை முழுமையாக ஆதரிக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "சில அரசியல் கட்சிகள் மசோதாவைப் பற்றிய தவறான தகவல்களை பரப்பி குழப்பம் உருவாக்குகின்றன.
எனவே, உண்மையான தகவல்களை மக்களுக்கு விளக்குவது எங்களது கடமை. சுதந்திரத்திற்கு முன்பு, ஒரு இஸ்லாமியர் தனது சொத்தை வக்ஃப் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியிருந்தால், அது அரசின் கண்காணிப்பின் கீழ் வரவேண்டும்.
அதனால்தான் மத்திய, மாநில அரசுகள் இதில் உட்புகுந்து நடைமுறைகளை கட்டுப்படுத்துகின்றன" என்று தெரிவித்தார்.
English Summary
BJP Annamalai say about Political party