வி.சி.க எம்.எல்.ஏ பனையூர் பாபுவின் அறிவிப்பு..! சுப, துக்க நிகழ்ச்சிக்கான பொருட்கள் இலவசம்.!! - Seithipunal
Seithipunal


வி.சி.க கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பு பலரையும் வியக்க வைத்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மு. பாபு. இவரை பனையூர் பாபு என்றால் பலருக்கும் தெரியும். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். 

இவர் தனது தொகுதி மக்களின் நலன் கருதி சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படத்தின் படி, " பனையூர் மு பாபு பவுண்டேஷன், எரம்மா அம்மாள் அறக்கட்டளை சார்பில் பொது மக்களுக்கு ஓர் நற்செய்தி.. 

செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் நலன் கருதி சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு பயன்படும் வகையில் சாமியான பந்தல், சேர், டேபிள் மற்றும் குளிர்சாதன பெட்டி, சொர்கரதம் ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். தொடர்புக்கு 91763 83388, 98846 53388 ஆகிய எண்களை அழைக்கலாம். செய்யூர் தொகுதி மக்களுக்கு மட்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK Cheyyur MLA Panaiyur Babu Announcement for Constituency Peoples


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->