தேர்தல் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


தேர்தல் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.!

சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார். அப்போது, “கர்நாடக முதலமைச்சராக தேர்வாகியுள்ள சித்தராமையாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. அதிமுக பாஜகவுடன் பயணம் செய்தால் அதிமுகவிற்கு பயன் கிடையாது. எதிர்காலத்தில் பாஜகவால் அதிமுக பலவீனப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

பாஜக தில்லு முல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பார்க்கிறது. அதிமுக, பாமகவின் சுயநலத்தால் மட்டும் தான் பாஜக தமிழகத்தில் நுழைகிறது. திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் எந்த செயலிலும் விசிக ஈடுபடாது. தமிழகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் சமூக வாரியாக இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த செயல் திட்டம் வகுக்க வேண்டும்.  

கர்நாடக தேர்தல் வெற்றிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றி விட வேண்டும். மதுவிலக்குக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி போராடினால் அவருடன் இணைந்து போராடவதற்கு தயார் என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vck leader thirumavalavan press meet chennai ashok nagar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->