பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்துடன் செல்பி - வைரலாக திருமாவளவனின் ட்வீட்.!!
vck leader thirumavalavan selfie with director b ranjith
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், இவர் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களையும் தயாரித்தும் வருகிறார். கடைசியாக சீயான் விக்ரம் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்பொழுது வேட்டுவம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்தில் ஆர்யாவும் நடிக்கிறார்கள். இந்தப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக உள்ளது.
பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் வேட்டுவம் படக்குழுவினரை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
மேலும், விசிக தலைவர் திருமாவளவன் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யா அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இது பேசுபொருளாகியுள்ளது.
English Summary
vck leader thirumavalavan selfie with director b ranjith