அரசியலுக்கு வருகிறாரா அஜித்? - பரப்பரப்பைக் கிளப்பிய போஸ்டர்.!
actor ajith poster viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் நடிகர் அஜித்குமார் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒன்றாக சேர்த்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திடீங்க. இனி தமிழ்நாட்டிற்கு எப்போது பெருமை சேர்க்க போறீங்க என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி காய்நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் – அண்ணாமலையின் போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.