30 வயது, 3 பிள்ளைக்கு தாய்! மதம் மாறி 18 வயது பள்ளி காதலனை 3வது திருமணம் செய்த பெண்!
Uttar Pradesh conversion love marriage
உத்தரபிரதேசத்தில் 3 குழந்தைகளுக்குத் தாயான பெண் 12ம் வகுப்பு காதலனை மதம் மாறி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயதான ஷப்னம். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்து உள்ளது. இதில் அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தனது 18 வயது காதலனுடன் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். அதற்காக, அவர் இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறி "ஷிவானி" என்ற புதிய பெயரையும் சூட்டி கொண்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் சொன்ன தகவலின்படி, ஷப்னம் முதலில் மீரட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததாகவும், அவரிடம் விவாகரத்து பெற்றுப் பின் தௌஃபிக் என்பவரை திருமண செய்து கொண்டதாகவும், அவருக்கு அண்மையில் நடந்த சாலை விபத்தில் கை கால்கள் பாதிக்கப்பட்டபோது, ஷப்னம் அவரை பிரிந்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்போது 12ம் வகுப்பு படித்து வரும் 18 வயது மாணவனை காதலித்து, மதம் மாறி இன்று கோவில் விழா ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளார் ஷப்னம் என்ற ஷிவானி.
English Summary
Uttar Pradesh conversion love marriage