நாளை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்!
Mahaveer jayanthi Chennai Metro Rail
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மெட்ரோ ரெயில் அட்டவணையில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.
அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
English Summary
Mahaveer jayanthi Chennai Metro Rail