இனி இது கட்டாயம்! இன்ஸ்டாகிராமில் 16 வயதுக்குட்பட்டோருக்கு புதிய கட்டுப்பாடுகள்! - Seithipunal
Seithipunal


16 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், குழந்தைகள், இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தி வருவதைக் கவனித்த மெட்டா நிறுவனம், அவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

புதிய அம்சத்தின் கீழ், இனி 16 வயதுக்குள் உள்ள பயனர்கள், பெற்றோரின் அனுமதி இல்லாமல் நேரலை ஒளிபரப்புகள் தொடங்க முடியாது.

மேலும், நேரடியாக வரும் ஆபாச உள்ளடக்கங்களை தானாக மங்கலாக்கும் பாதுகாப்பு வசதியை முடக்கும் முயற்சிக்கும் பெற்றோர் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபாச உள்ளடக்கங்களுக்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளது.

இது குழந்தைகளை இணைய ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாகும். பெற்றோர்களின் கவலைகளை குறைத்து, குழந்தைகளின் செயல்களை நெருக்கமாக கண்காணிக்க வழிவகுக்கும்.

இந்த அம்சங்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிற நாடுகளிலும் விரைவில் அமலாகும் என மெட்டா தெரிவித்துள்ளது.

மேலும் இந்தக் கட்டுப்பாடுகள், மெட்டாவின் மற்ற தளங்களான முகநூல், மெசஞ்சர் ஆகியவற்றிலும் விரிவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Instagram restrictions Minors 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->