2026 கூட்டணியை உறுதிசெய்த திருமாவளவன்! முடித்துக்கொண்ட ஆதவ் அர்ஜுனா!  - Seithipunal
Seithipunal


ஏதோ அழுத்தம், மிரட்டல், அச்சுறுத்தல் என்கிறார்கள்.. என்னோடு நெருக்கமாக இருப்பவர்களுக்குத் தெரியும் என் இயல்பு என்று, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் திருமாவளவன் பேசியதாவது, "என்னை தூதராக பயன்படுத்தி திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள். 

அவர்களின் உண்மையான குறி திமுக தான், நான் இல்லை. திமுக என்கிற அரசியல் இயக்கம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதற்காக சதி நிகழ்ந்து வருகிறது. 

விடுதலை சிறுத்தை கட்சி எப்போதும் சனாதனத்திற்கு எதிராகத்தான் இருக்கும். எவ்வளவு பேரிழப்பு ஏற்பட்டாலும் அதை தாங்கிக் கொள்ளும் சக்தியாக விடுதலை சிறுத்தை கட்சி இருக்கும்.

கடந்த 7 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கிறோம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தக் கூட்டணியை விட்டு விலகமாட்டோம்.

திமுக கூட்டணியில் இருந்து எங்களைப் பிரிக்க சனாதன அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. அது நடக்காது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடுவோம்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.

இதற்கிடையே, மன்னராட்சி என்று திமுகவை கடுமையாக விமர்சித்ததற்காக விசிக்காவிலிருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்த ஆதவ் அர்ஜுனா, நிரந்தமாக அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Thirumavalavan DMK MK Stalin Alliance in 2026 Election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->