ஐந்து ஆண்டுகளாக மூடி கிடக்கும் ஸ்டெர்லைட்! உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் புதிய மனு! - Seithipunal
Seithipunal


வேதாந்த நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

கழிவு நீர் வெளியேறுவதை தடுப்பது, மீதமுள்ள தேங்கிக் கிடக்கும் ஜிப்சத்தை அகற்றுவது, நான்காவது கழிவுக் குழியின் கரையை சீரமைப்பது , அங்கு இருக்கும் பசுமை நிலைகளை பராமரிப்பது போன்ற பணிகளுக்கு எல்லாம் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த பணிகளை சரிவர மேற்கொள்ள தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ் குமார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.‌ஆலையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் ஆலையின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜிப்சத்தை உள்ளூர் மேலாண்மை குழுவினர் நேற்று வந்து பார்வையிட்டனர்.

ஆலையின் வெளிப்புறப் பகுதிக்கு கழிவுகளை கொண்டு வரும் இடத்தை ஆய்வு செய்து அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து மதியம் 1:30 வரை இந்த ஆய்வு நீடித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vedhantha Has petitioned in Court About Tuticorin Sterlite Plant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->