தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் காய்கறிகள்.. அதிர்ச்சியில் மக்கள்.!!
Vegetables price increase in Chennai koyambedu market
பெட்ரோல், டீசல் மற்றும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரி, வேன் என 500 வாகனங்களில் சுமார் 5000 டன் தக்காளி, வெங்காயம், உருளை, பீன்ஸ், முருங்கை போன்ற காய்கறிகள் வருகிறது.
காய்கறி வரத்து அதிக அளவில் இருந்தாலும், அவற்றின் விலை குறையவில்லை. அதற்கு மாறாக விலை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு காய்கறியும் 10 முதல் 20 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ரூ. 7க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ. 15க்கு, ரூ. 6க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நவீன தக்காளி ரூ. 14 க்கும், ரூ. 14க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம், ரூ. 18க்கு, ரூ. 30க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 70க்கு, ரூ. 20க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அவரை ரூ. 70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் முத்துக்குமார் இதுகுறித்து கூறியதாவது, கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்கறிகளை விலை சரிந்தது. இதனால் வியாபாரிகள் மிகவும் வேதனை அடைந்தனர். தற்போது பெட்ரோல் , டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் அதிகரிப்பு காரணமாக காய்கறி விலை உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
Vegetables price increase in Chennai koyambedu market