தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கடையடைப்பு!   - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நுரையிரல் தொற்று காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 76. 

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வெள்ளையன் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், வணிகர் சங்கத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், தமிழ் தேசியத்தின் மீது ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவை அடுத்து, நாளை தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடையடைப்பு செய்து, இரங்கல் தெரிவிக்க உள்ளதாக வணிகர் சங்க பேரவை அமைப்பை சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளனர். 

மேலும், நாளை மறுநாள் தென் மாவட்டங்களில் கடையடைப்பு இருக்கும் என்றும் வணிகர் சங்க பேரவை அமைப்பை சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellaiyan Death Shop Shutdown


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->