உடலில் வைக்கோல் போர்த்தி வினோத வழிபாடு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏழைகாத்த அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் நடைபெறும் திருவிழாவில் 60 கிராம மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். 

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது நடுத்தர வயதுடைய பெண்கள் 1000-க்கும் மேற்பட்டோர் மதுக்கலயம் ஏந்தி வெள்ளலூர் ஏழைகாத்த மாரியம்மன் கோவிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பெரிய ஏழைகாத்த அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வருவர்.

இதேபோல் ஆண்கள், சிறுவர்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரி போர்த்தி பலவித வேடங்களை அணிந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். பொதுமக்கள் பலர் சிறிய தெய்வ சிலைகளை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக எடுத்து செல்வர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellalore ezhaikaththa amman temple festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->