3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய சிறை கைதி - தனிப்படை போலீசார் அதிரடி.!!
vellore central jail prison found after three years
வேலூர் சிறையில் இருந்து தப்பித்துச் சென்ற சிறை கைதி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தனிப்படை போலீசாரால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மத்திய சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்படி தங்க வைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர் அவ்வப்போது தப்பித்து செல்கின்றனர்.

அதன் படி வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த ஆயிள் தண்டனை கைதி முத்துக்குமார், கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி சிறையில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார். அவரை வேலூர் மத்திய சிறை காவலர்கள் மற்றும் பாகாயம் போலீசார் வருட கணக்கில் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கைதி முத்துக்குமார் 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சிக்கியுள்ளார். அவரை பெங்களூருவில் வைத்து தனிப்டை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
vellore central jail prison found after three years