தண்டவாளத்தை கடக்க முயன்ற காளை! வேலூரில் மனதை உருக்கிய பரிதாபச் சம்பவம்! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் விழாவின்போது போட்டியில் கலந்து கொண்ட காளை ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் கே வி குப்பத்தை அடுத்த இபி காலனி பகுதியில் மாடு விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் காளைகள் வந்து கலந்து கொண்டன. பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டு ரசித்தனர்.

இந்தப் போட்டியில் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான முனீஸ்வரன் என்ற காளையும் கலந்து கொண்டது. போட்டியின் போது அந்தக் காளை  ரோட்டை விட்டு ஓடி அருகிலிருந்த தண்டவாளத்தை கடக்க  முயன்றது.

அப்போது காட்பாடியில் இருந்து வந்த ரயில் மாட்டின் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு விடும் விழாவிற்கு சென்ற காளை ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore district a bull died in a tragic train accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->