வேலூர் ஜலகண்டடேஸ்வரர் கோவில் விவகாரம்! போராட்டம் வெடிக்கும்! எச்சரிக்கும் இந்து முன்னணி!  - Seithipunal
Seithipunal


வேலூர், ஜலகண்டேஸ்வரர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "வேலூர் கோட்டை ஜலகண்டடேஸ்வரர் கோவிலில் 400 ஆண்டுகளாக மூலவர் இல்லாமல் வழிபாடு நடைபெறாமல் இருந்தது தாங்கள் அறிந்ததே. இந்து முன்னணி 1982-ல் வீரத்துறவி ராம.கோபாலன் மற்றும் வீரபாகு தலைமையில் ஊர்மக்களை ஒன்றிணைத்து பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து சுவாமியை சத்துவாச்சாரி பகுதியில் இருந்து கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய வைத்தோம். 

இந்த கோவிலை தரும ஸ்தாபன கமிட்டி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக ஜலகண்டேஸ்வரர் கோவிலை பராமரித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். மற்றும் கிருபானந்த வாரியார் முயற்சி செய்தும் சுவாமியை பிரதிஷ்டை செய்ய முடியவில்லை. ஆனால் எந்த அரசாங்கமும் சுவாமி பிரதிஷ்டை செய்ய எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை. 

தற்போது இந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்த போவதாக செய்தி வருகின்றது. தரும ஸ்தாபன கமிட்டி சரியான முறையில் கணக்கு வழக்குகளை பராமரித்து வருகின்றனர். 

இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த கடந்த 40 ஆண்டுகளாக இருந்த எந்த அரசாங்கமும் முயற்சி செய்யவில்லை. தற்போது முயற்சி செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது. 

எனவே அரசு கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் கேட்டு கொள்கிறேன். கையகப்படுத்தும் திட்டத்தை என கைவிடவில்லை என்றால் வேலூர் முழுவதும் உள்ள மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Hindu Temple issue Hindu Munnani SekarBabu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->