வேங்கைவயல் விவகாரம் | குற்றவாளியை கண்டுபிடிக்க சிபிசிஐடி-க்கு கூடுதல் அவகாசம்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட கொடூர நிகழ்வு நடந்து ஓராண்டு  நிறைவடைந்துள்ளது.

இந்த சமைப்பதில் ஈடுபட்டவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே குரலாக இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே ஐயங்கள் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

வேங்கைவயல்  கொடுமை குறித்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையிடமிருந்து சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட பிறகும் கூட,  விசாரணையில் முன்னேற்றமும் இல்லை என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனமாக உள்ளது.

மேலும், வேங்கைவயல் சுற்றுப்பகுதிகளில் வாழும் பிற சமூகத்தினர் மீதும் அவதூறுகளை சிலர் திட்டமிட்டு பரப்புவதாகவும் சொல்லப்படுகிறது.

இது அத்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்க குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. 

இந்த நிலையில், வேங்கைவயல் சம்பவத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, சிபிசிஐடி-க்கு மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரி சிபிசிஐடி மனு தாக்கல் செய்த நிலையில், தற்போது கூடுதல் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VengaiVayal issue court new order to CBCID


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->