திடீர்திருப்பம் | நாங்கள் பாதிக்கப்பட்டோம்! டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேர்!
Vengaivayal issue DNA Test 2023
வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த எட்டு பேர் டி என் ஏ பரிசோதனைக்கு வர முடியாது என்று சிபிசிஐடி போலீஸ்சாரிடம் தெரிவித்துள்ளனர். 11 பேரில் மூன்று பேர் மட்டுமே தற்போது டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களது ரத்தத்தை கொடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் யார் என்பது தெரியவரவில்லை.
இந்த விவகாரத்தில் சாதியப்போக்கான அரசியல் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் ஆளும் அரசு காலம் தாழ்த்தி வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
கிட்டத்தட்ட 110 நாட்களை நெருங்கி உள்ள நிலையில், இன்றுவரை குற்றவாளியை கண்டறிய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், சந்தேகிக்கப்படும் 11 பேரை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இன்று வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பணியாற்றி வரும் காவலர் முரளி ராஜா மற்றும் இறையூர் மற்றும் கீழ முக்காடு பகுதியை சேர்ந்த 3 பேர் மட்டுமே டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு வருகை தந்துள்ளனர்.
வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த எட்டு பேர், நாங்கள் இந்த டிஎன்ஏ பரிசோதனையை செய்து கொள்ள மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த மலம் கலக்கப்பட்ட நீரால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட எங்களையே குற்றவாளியாக முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சிபிசிஐடி போலீசார் நீதிமன்றம் சென்று டிஎன்ஏ செய்வதற்கான உத்தரவுகளை வாங்கி, பரிசோதனை செய்யாத எட்டு பேரையும் பரிசோதனை பரிசோதனைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்று தெரிய வருகிறது.
English Summary
Vengaivayal issue DNA Test 2023