பொன்முடிக்கு எதிரான அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் ஜூலை 6ம் தேதி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் பொன்முடி கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பத்திர பதிவு செய்ததாக அமைச்சர் பொன்முடி, அவருடைய மாமியார் சரஸ்வதி அப்போதைய சார்பதிவாளர் புருபாபு மற்றும் அப்போதைய சைதாப்பேட்டை எம்எல்ஏ சைதை கிட்டு ஆகியோர் உட்பட 10 பேருக்கு எதிராக 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் குறித்தான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் புருபாபு, சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏ சைதை கிட்டு ஆகியோர் உயிரிழந்து விட்டனர். இந்த நிலையில் மற்றவர்களுக்கு எதிரான இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதான வழக்கில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜரத்தினம் உட்பட 90க்கும் மேற்பட்ட சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Verdict in Ponmudi govt land grab case on July 6


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->