மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய், கமல்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 71 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவருக்கு பிரதமர், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

''சமூக நீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ பிறந்தநாளிள் வாழ்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில், 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Kamal wished MK Stalin birthday


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->