அரசியல் கட்சியாக மாறுகிறது விஜய் மக்கள் இயக்கம்!
vijay makkal iyakkam convert political party
தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரசிகர் மன்றமும் உள்ளது. இந்த ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். இதன் மூலம் பல்வேறு சேவைகளையும் அவர் செய்து வருகிறார்.
மேலும், தமிழகத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை அழைத்து விருதுகள் வழங்கியும், சமீபத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நேரடியாக சென்று, நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிலையில், நேற்று பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இதுவரைக்கும் இல்லாத வகையில் அரசியல் கட்சி குறித்து பல்வேறு அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு விஜய் வழங்கியுள்ளார். மேலும், இந்தக் கூட்டத்தில் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே, விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்வதாகவும், கட்சியின் தலைவராக விஜய் தொடர்வார் என்றும் தேர்தல் போட்டி, கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க விஜய்க்கு அதிகாரம் அளிப்பது என்றும் பொதுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், வரும் பிப்ரவரி 4-ம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படி கட்சியாக பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளனர். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து இப்போதே விஜய் காய் நகர்த்த தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
vijay makkal iyakkam convert political party