வீடியோ: விக்கிரவாண்டியில் பரபரப்பு! திமுகவின் தோல்வி பயமா? அத்துமீறிய போலீஸ்? - பாமகவினர் சாலை மறியல்!  - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.73% வாக்குப்பதிவு நடந்துள்ளது. 276 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.

மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டிஇடும் நிலையில், களம் திமுக vs பாமக என்று உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தோல்வி பயத்தில் இருக்கும் திமுகவினர் காவல்துறையை வைத்து, கக்கனூர் வாக்குச்சாவடியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளரை தரக்குறைவாக பேசியுள்ளதாக பாமகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மேலும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் காவல்துறையை கண்டித்து பாமகவினர் சாலை மறியல் போராட்டமும் செய்து வருகின்றனர்.

பூத் சிலிப் வழங்கி கொண்டிருந்த மற்ற கட்சியினரை அகற்றாமல், பாமகவினரை மட்டும் காவல்துறையினர் வெளியேற சொன்னதால் சர்ச்சை வெடித்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாக்குவாதம் செய்த பாமகவினர், சாலை மறியல் போராட்டத்திலும் இறங்கியுள்ளனர்.

மேலும், வண்டிமேடு பகுதி KVR நகரில் எந்த ஒரு ஆவணம் இல்லாமல் அனுமதித்த நிலையில், பாமக நகர செயலாளர் போஜராஜன் ஆவணம் இல்லாமல் அனுமதிக்க கூடாது என கேட்கும்பொழுதே, தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சிக்கு உடந்தையாக வாக்களிக்க அனுமதித்தாகவும் ஒரு காணொளி வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vikiravandi election PMK vs DMK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->