ரூ.2000 நோட்டுக்களை மாற்ற கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் - வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா.! - Seithipunal
Seithipunal


கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1000 ரூபாய் நோட்டிற்கு பதிலாக பிங்க் நிறத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தது.

இந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த சில நாட்களிலேயே அதிகளவிற்கு அச்சடிக்கப்பட்டதால் கடந்த 2019 ஆம் ஆண்டு அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கி கணக்கில் செலுத்துவதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

இந்த நிலையில் 2000 நோட்டுகள் திரும்ப பெறுவது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பேசியதாவது, 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்த மாதத்தில் 8 நாட்களும், அடுத்து 4 மாதங்கள் மட்டுமே கால அவகாசம் என்பது கண்டிப்பாக போதுமானதாக இருக்காது.

பொது மக்களிடம் இருந்து வியாபாரிகள் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வந்தாலும் வணிக ரீதியாக 2000 ரூபாய் நோட்டுகள் வியாபாரிகளிடம் அதிக அளவில் சேருவதற்கான வாய்ப்புகள் வாய்ப்புகள் உள்ளது.

எனவே செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டித்து வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடமிருந்து வாங்கிய பணத்துக்கு வருமான வரித்துறையினரிடம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையும் வியாபாரிகள் பலருக்கு ஏற்பட்டது. இதனால் கடுமையான பாதிப்புகளையும் வியாபாரிகள் சந்தித்தனர். அதன் காரணமாகவே பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளுமாறு கூறி வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikkirama raja request to time extend 2000 rupees notes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->