#BREAKING | விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் புகழேந்தி திடீரென காலமானார். விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில்,  விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார். 

மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு ஜூன் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை வேட்புமனு செய்யலாம் என்றும் சத்யபிரதா சாகு அறிவித்தார். 

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று  ஜூலை 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு அறிவித்தார். 

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்னியூர் சிவா திமுக விவசாய தொழிலார் அணி செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi By Election 2024 DMK Candidate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->