விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமக போட்டி - அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் புகழேந்தி திடீரென காலமானதை தொடர்ந்து, விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு இன்று முதல் (ஜூன் 14ஆம் தேதி) வரும் 21ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று  ஜூலை 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு அறிவித்தார். 

இந்த நிலையில், இந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைத்து பாடுபடுவோம்! வெற்றி பெறுவோம்" என்று, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுக தரப்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை விக்கிரவாண்டி பகுதி பாமகவின் கோட்டை என்று அறியப்படுவதால், பாமக vs திமுக என்ற இருமுனை போட்டியே என்று களம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi By Election 2024 NDA Alliance PMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->