விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! யாருக்கும் ஆதரவு இல்லை! எங்கள் ஒட்டு நோட்டாவுக்குதான் - செ.கு தமிழரசன்! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நோட்டாக்கு வாக்களிப்போம் என இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசன் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஜூலை 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு தமிழரசன் தெரிவித்ததாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் எந்த ஒரு புதிய திட்டங்களும் இல்லை. ஆக்கபூர்வமான செயல்களும் இல்லை.

உள்ளாட்சி அமைப்புகளில் துணைத்தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொறுப்புகள் கிடைக்காத நிலையுள்ளது. இந்த அரசு தாழ்த்தப்பட்ட மக்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது.

ஆனால், அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக,தேமுதிக புறக்கணித்து உள்ள நிலையில் எங்களை பொறுத்தவரை நோட்டாவுக்கு வாக்களிப்போம். மற்ற யாருக்கும் எங்களுடைய ஆதரவு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi by election No support for anyone For our sticky note SK Tamilarasan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->